வடகொரியாவில் இறப்புகளை தடுக்க தவறிய அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதிப்பு!

சமீபத்திய வெள்ளத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இறப்புகளைத் தடுக்கத் தவறியதற்காக வடகொரியா 30 அதிகாரிகளுக்கு மரணதண்டனை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.
கனமழை மற்றும் நிலச்சரிவுகள் சாகாங் மாகாணத்தைத் தாக்கிய பின்னர் பலர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் பலர் வீடற்றவராகியுள்ளனர்.
இந்நிலையில் இறப்புகளை தடுத்திருக்கலாம் எனக் கூறப்படும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க பரிசீலிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதேவேளை கடந்த மாத இறுதியில் வெள்ளம் பாதித்த பகுதியில் 20 முதல் 30 பேர் வரை ஒரே நேரத்தில் தூக்கிலிடப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
(Visited 1 times, 1 visits today)