தாய்லந்தில் பறவை கழிவால் உடைந்து விழுந்த கூரை – நால்வர் காயம்
தாய்லந்தின் Yasothon வட்டாரத்தில் இருக்கும் Kham Khuean Kaeo எனும் மாவட்டத்தில் திடீரென்று கூரை ஒன்று உடைந்து விழுந்துள்ளது.
ஒரு மண்டபத்தில் முக்கிய கண்காட்சி நிகழ்ச்சியின் போது மாணவர்கள், ஆசிரியர்கள், மாவட்ட அதிகாரிகள் பலர் கூடியிருந்தனர்.
மண்டபம் முழுதும் தூசியாலும் கூரையின் சிதைவுகளாலும் நிரம்பியது. நால்வர் காயமுற்றதாக தெரியவந்துள்ளது.
பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் கூரை உடைந்தற்கான காரணம் கூரையின் மீது பறவைகள் சில வெகு காலமாகத் தங்கியிருந்ததாகவும் அவை அங்கு தான் மலம் கழிப்பதாகவும் அது சுத்தம் செய்யப்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது.
நாளடைவில் கழிவுகளின் பாரம் அதிகமானதால் கூரை பலவீனமானதாக குறிப்பிடப்படுகின்றது.
பழைய மண்டபத்தின் கூரை அதனால் உடைந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. மண்டபத்தைச் சீரமைக்க முயற்சி எடுக்கப்படுவதாக அதிகாரிகள் கூறினர்.