இலங்கையில் ஹேர் ஸ்டைலிங் செய்த பெண் வைத்தியசாலையில் அனுமதி
விருந்தொன்றில் கலந்து கொள்வதற்காக தலைமுடியை சீர்செய்வதற்காக சென்ற பெண்ணொருவர் தலையில் இருந்த பொருட்களால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக தனது முடிகள் அனைத்தும் உதிர்ந்துள்ள சம்பவம் மினுவாங்கொடை பிரதேசத்தில் இருந்து பதிவாகியுள்ளது.
தலைமுடி உதிர்வு காரணமாக குறித்த பெண் கம்பஹா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மினுவாங்கொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மினுவாங்கொடை பொரகொட வத்த பிரதேசத்தில் வசிக்கும் 35 வயதுடைய திருமணமான பெண்ணே இந்த சம்பவத்தை எதிர்கொண்டுள்ளார்.
மினுவாங்கொடை பகுதியில் உள்ள அழகு நிலையமொன்றுக்கு விருந்து ஒன்றில் கலந்து கொள்வதற்காக தனது தலைமுடியை சீர்செய்வதற்காக சென்றிருந்தார்.
அங்கிருந்த தைலங்களை பூசியதால், தலையில் கடுமையான வீக்கத்துடன் அந்த பெண் அசௌகரியம் அடையத் தொடங்கியதாகவும், இதுபற்றி பணிப்பெண்களிடம் கூறியதாகவும் கூறப்படுகிறது.
பணிப்பெண்கள் பெண்ணின் தலையை கழுவி துடைத்துள்ளனர்.
அதீத அசௌகரியம் காரணமாக குறித்த பெண் தனது தலையை மசாஜ் செய்ய ஆரம்பித்ததாகவும், தலைமுடி முற்றாக உதிர்ந்து விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், ஹேர் ஸ்டைலிங் செய்வதற்காக சலூனில் இருந்து பதினைந்தாயிரம் ரூபாய் வாடகையும் பெற்றுள்ளதாக அந்த பெண் கூறியுள்ளார்.