இந்தியா

வங்காளதேசம்: நாடு தழுவிய அளவில் வைத்தியர்கள் வேலைநிறுத்த போராட்டம்

வங்காளதேச தலைநகர் டாக்காவை சேர்ந்த கல்லூரி மாணவன் அஷனுல் ஹகி நேற்று சாலைவிபத்தில் படுகாயமடைந்த நிலையில் அஷனுல் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனிடையே, சிகிச்சை அளித்ததில் வைத்தியர்கள் அலட்சியம் காட்டியதாலேயே மாணவன் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றஞ்சாட்டினர்.

மேலும், ஆத்திரத்தில் சிகிச்சை அளித்த வைத்தியர்களை உறவினர்கள் தாக்கினர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், வைத்தியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து இன்று முதல் வங்காளதேசத்தில் நாடு தழுவிய அளவில் வைத்தியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வைத்தியர்கள் போராட்டத்திற்கு செவிலியர்களும் ஆதரவு அளித்துள்ளனர்.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனை வைத்தியர்கள் நாடு தழுவிய அளவில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வைத்தியர் கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யவேண்டும், மருத்துவமனையில் பணியாற்றும் வைத்தியர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வங்காளதேசத்தில் சமீபத்தில் மாணவர்கள் போராட்டம் நடந்து ஆட்சிமாற்றம் ஏற்பட்ட நிலையில் தற்போது வைத்தியர்கள் போராட்டத்தில் குதித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TJenitha

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!