அமெரிக்காவில் நேபாள மாணவியை கொலை செய்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர்
நேபாளத்தைச் சேர்ந்த 21 வயது மாணவி, அமெரிக்காவில் உள்ள அவரது அடுக்குமாடி குடியிருப்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவரால் ஒரு கொள்ளைச் சம்பவத்தின் போது சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இரண்டு நாட்களுக்குப் பிறகு 52 வயதான பொபி சின் ஷா என அடையாளம் காணப்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சமூகக் கல்லூரி மாணவியான முனா பாண்டே, தனது ஹூஸ்டன் குடியிருப்பில் பல துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் காணப்பட்டார் என்று போலீஸார் தெரிவித்தனர்.
சிசிடிவியில் சிக்கிய ஷாவின் புகைப்படத்தை போலீஸார் வெளியிட்டனர். அன்றைய தினம் ஷா ஒரு போக்குவரத்து நிறுத்தத்தில் கைது செய்யப்பட்டு கொலைக் குற்றம் சாட்டப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
முனா பாண்டே 2021 ஆம் ஆண்டு நேபாளத்தில் இருந்து ஹூஸ்டன் சமூகக் கல்லூரியில் படிக்கச் சென்றார். அவரது அபார்ட்மெண்டிற்குள் அவரது உடல் கண்டெடுக்கப்படுவதற்கு முன்பு அவரது தாயார் அவரை அடைய பல நாட்கள் முயன்றதாக ஹூஸ்டனின் நேபாள சங்கத்தின் உறுப்பினர் தெரிவித்தார்.
முனா பாண்டேயின் தாயார் ஹூஸ்டனுக்குச் செல்வதற்கான பயண ஏற்பாடுகளைச் செய்ய நேபாள துணைத் தூதரகத்துடன் சங்கம் செயல்படுகிறது.