ரஷ்யாவில் 22 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் மாயமானது

22 பயணிகளுடன் ரஷ்ய ஹெலிகாப்டர் மாயமானது.
கிழக்கு பிராந்தியத்தில் உள்ள கம்சட்கா தீபகற்பத்தில் உள்ள எரிமலை அருகே குறித்த ஹெலிகாப்டர் காணாமல் போயுள்ளது.
எம்ஐ-8 ஹெலிகாப்டரில் 19 பயணிகளும் மூன்று பணியாளர்களும் இருந்தனர்.
கம்சட்கா பிரதேச ஆளுநர் விளாடிமிர் சோலோடோவ் கூறுகையில், ஹெலிகாப்டர் வாச்காய்ட்ஸ் எரிமலைக்கு அருகில் இருந்து புறப்பட்டு நிகோலேவ்கா கிராமத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது.
ஹெலிகாப்டர் பயணித்த பைஸ்ட்ரேயா ஆற்றின் கரையில் தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டதாக அவர் கூறினார்.
அப்பகுதியில் தூறல் மற்றும் பனிமூட்டம் காணப்படுவதாக அரச ஊடகமான Tass தெரிவித்துள்ளது.
Mi-8 என்பது 1960 களில் வடிவமைக்கப்பட்ட இரட்டை எஞ்சின் ஹெலிகாப்டர் ஆகும்.
(Visited 21 times, 1 visits today)