பிரித்தானியாவில் AI மூலம் இயங்கும் வகுப்புகள் அறிமுகம்!
UK இன் முதல் “ஆசிரியர் இல்லாத” GCSE வகுப்பு லண்டனில் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்களுக்குப் பதிலாக செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி, பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.
லண்டனில் உள்ள டேவிட் கேம் என்ற தனியார் கல்வி நிறுவனத்திலேயே இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மாணவர்கள் தங்கள் கணினிகள் மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட்களில் செயற்கை நுண்ணறிவு தளங்களின் கலவையைப் பயன்படுத்தி கற்றுக்கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மாணவர் எதில் சிறந்து விளங்குகிறார் மற்றும் அவர்களுக்கு எதில் கூடுதல் உதவி தேவை என்பதை தளங்கள் கற்றுக்கொள்கின்றன, பின்னர் அவர்களின் பாடத் திட்டங்களை அந்த காலத்திற்கு ஏற்றவாரு ஏஐ தொழில்நுட்பம் மாற்றியமைப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த திட்டம் வரும் செப்டம்பர் மாதம் முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.