ஆசியா செய்தி

போலியோ தடுப்பூசிக்காக காசாவில் தாக்குதலை இடைநிறுத்த ஒப்புக்கொண்ட இஸ்ரேல்

காஸாவில் போலியோ தடுப்பூசி செலுத்துவதற்காக இஸ்ரேல் 3 நாட்கள் தாக்குதல் இடைநிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக உலக சுகாதர நிறுவனம் தெரிவித்துள்ளது.

காசாவில் போலியோ தடுப்பூசிகளை வழங்குவதற்கு ஐநா சுகாதார அதிகாரிகளை அனுமதிக்க இஸ்ரேல் மூன்று நாட்களுக்கு “மனிதாபிமான இடைநிறுத்தங்களுக்கு” ஒப்புக்கொண்டுள்ளதாக ஐநாவின் சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

உள்ளூர் நேரப்படி காலை 6 மணி முதல் மாலை 3 மணி வரை, ஒரு நாளைக்கு எட்டு மணிநேரம் தாக்குதல் இடைநிறுத்தப்படுவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என்று WHO குறிப்பிட்டுள்ளது.

“நாங்கள் விவாதித்து ஒப்புக்கொண்ட விதத்தில், போலியோ தடுப்பூசிகளை வழங்குதல் செப்டம்பர் முதல் தேதி, மத்திய காசாவில், மூன்று நாட்களுக்குத் தொடங்கும், மேலும் தடுப்பூசியின் போது மனிதாபிமான தாக்குதல் இடைநிறுத்தம் இருக்கும்” என்று பாலஸ்தீனிய பிராந்தியத்திற்கான ஏஜென்சியின் பிரதிநிதி ரிக் பீபர்கார்ன் குறிப்பிட்டார்.

(Visited 8 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி