சவப்பெட்டியில் திருமணத்திற்கு வந்த மாப்பிள்ளை

இணையத்தில் நெட்டிசன்களால் திடீரென புகைப்படங்கள், அல்லது வீடியோக்கள் வைரலாகும்.
அந்த வகையில் தற்போது திருமணத்தில் மாப்பிள்ளையும், பொண்ணும் என்ட்ரி கொடுக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவில் திருமணத்தில் வித்தியாசமான முறையில் என்ட்ரி கொடுக்க வேண்டும் என்பதற்கான மணப்பெண் அந்தரத்தில் இருந்து கயிறை பிடித்து கீழே இறங்குகிறார்.
சரி மணப்பெண் தான் இப்படி என்ட்ரி கொடுக்கிறார் என்று பார்த்தால், மாப்பிளை அதைவிட பயங்கரமாக என்ட்ரி கொடுத்துள்ளார்.
மீம்ஸில் வரும் சவப்பெட்டியில் உள்ள படுத்தபடி, அவரை 8 பேர் தூக்கி கொண்டு திருமணத்திற்கு வருகிறார்கள்.
அங்கு வந்தவுடன் சவப்பெட்டியில் இருந்து வெளியே வருகிறார் மாப்பிள்ளை.
இதை பார்த்த இணையவாசிகள் பலரும், கல்யாணமா-டா இது என கேட்டு வருகிறார்கள்.
(Visited 25 times, 1 visits today)