காரில் முன் சீட்டில் அமர்த்தி ஓய்வு பெற்றவரை அனுப்பிய ஆட்சியர்

புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர்களுக்கு டபேதாரராக அன்பழகன் என்பவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்தார்.
தற்போதைய புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமுவிற்கும் அன்பழகன் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக டபேதாராக பணியாற்றி வந்த நிலையில் கடந்த 29ஆம் தேதி அவர் பணி ஓய்வு பெற்றார்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் அவரது இல்லத்தில் அன்பழகனுக்கு பிரிவு உபசரிப்பு நிகழ்வுகள் மிக விமர்சியாக நடந்துள்ளது.
அதன்பின் அன்பழகனை தனது காரில் முன் சீட்டில் அமர வைத்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு நெகிழ்வோடு வீட்டுக்கு அனுப்பி வைத்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
(Visited 12 times, 1 visits today)