அதிகரித்து வரும் உலகளாவிய பதற்றங்கள் : இராணுவ செலவீனத்தை உயர்த்தும் ஐரோப்பிய நாடு!
2025 ஆம் ஆண்டிற்கான போலந்தின் பட்ஜெட் திட்டத்தில் 187 பில்லியன் ஸ்லோட்டிகள் பாதுகாப்பு செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் அதிகரித்து வரும் பதற்றங்கள் ஒவ்வொரு நாடுகளும் இராணுவ செலவுகளை உயர்த்துவதற்கு வழிவகுத்துள்ளது.
அந்தவகையில் பிரதமர் டொனால்ட் டஸ்க் பாதுகாப்பு செலவினங்களை அதிகரிப்பதற்காக முன்மொழிவுகளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.
“இது ஒரு பெரிய முயற்சி, ஆனால் அதிலிருந்து பின்வாங்க முடியாது” என்று டஸ்க் ஒரு செய்தி மாநாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பு செலவின திட்டம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.7% ஆக இருக்கும் என்றும் இது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் கணிசமான அளவு அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தற்போதைய முன்மொழிவு 2024 பட்ஜெட்டில் முந்தைய 159 பில்லியன் ஸ்லோட்டிகளின் ($41.5 பில்லியன்) பாதுகாப்பு செலவின சாதனையை முறியடிக்கும் எனக் கூறப்படுகிறது.