ஷேக் ஹசீனாவால் ஜமாத்-இ-இஸ்லாமி கட்சிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்
பங்களாதேஷின் காபந்து அரசாங்கம் நாட்டின் முக்கிய இஸ்லாமிய கட்சி மற்றும் அதனுடன் இணைந்த குழுக்களின் மீதான தடையை ரத்து செய்துள்ளது.
“பயங்கரவாத நடவடிக்கைகளில்” அவர்கள் ஈடுபட்டதற்கான ஆதாரம் கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளது.
ஹசீனாவுக்கு எதிரான கிளர்ச்சியாக மாறிய மாணவர்களின் போராட்டத்தின் போது கொடிய வன்முறையைத் தூண்டியதாகக் குற்றம் சாட்டி, முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அரசாங்கம் ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியை பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் தடை செய்தது.
ஹசீனாவின் நிர்வாகத்தை மாற்றிய காபந்து அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பில், “பயங்கரவாத நடவடிக்கைகளில்” ஜமாத் மற்றும் அதன் துணை அமைப்புகளின் ஈடுபாட்டிற்கான குறிப்பிட்ட ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று தெரிவித்தது.
கட்சி வன்முறையைத் தூண்டியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது மற்றும் தடையை “சட்டவிரோதமானது, சட்டத்திற்குப் புறம்பானது மற்றும் அரசியலமைப்பிற்கு விரோதமானது” என்று கண்டித்துள்ளது.