இத்தாலியில் உச்சக்கட்ட வறட்சி – குடிநீரின்றி 2 மாதங்களாக தவிக்கும் மக்கள்
இத்தாலியின் சிசிலி தீவில் வசிப்பவர்கள் குடிநீரின்றி 2 மாதங்களாக அவதியுறுகின்றனர்.
அங்கு ஏற்பட்ட வறட்சியால், அதன் கால்டானிசெட்டா (Caltanissetta) நகரத்தில் மக்கள் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர்.
அங்கீகரிக்கப்படாத தனியார் விற்பனையாளர்கள் லாரிகளில் தண்ணீர் விற்கின்றனர். அவர்களிடம் இருந்து மக்கள் அதிக விலை கொடுத்துக் குடிநீர் வாங்குவதாகத் தெரிவிக்கப்பட்டது.
4 ஆண்டுகளில் காணாத அளவுக்குக் குறைவாக மழை பெய்ததால், மே மாதம் இத்தாலிய அரசாங்கம் நாட்டில் அவசர நிலையை அறிவித்தது.
அதன் வழி வளங்களின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தி இலையுதிர் பருவமழைக்காலம் வரை சமாளித்துக்கொள்ளலாம் என்று திட்டமிட்டிருந்தது.
இப்போது வறட்சி மோசமடைந்ததால் நீரைப் பங்கீட்டு விநியோகம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
(Visited 1 times, 1 visits today)