ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் பயணிகளுக்கு குழப்பத்தை ஏற்படுத்திய ரயில்

மெல்போர்னில் இருந்து கிரேகிபர்ன் செல்லும் ரயில்கள் எசெண்டன் மற்றும் பிராட்மீடோஸ் இடையே திடீரென நிறுத்தப்பட்டுள்ளன.

இந்த பிரதான புகையிரத பாதையின் சேவைகள் நேற்று பிற்பகல் இடைநிறுத்தப்பட்டமையினால் மெல்பேர்ணில் பல பயணிகள் பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொது போக்குவரத்து விக்டோரியா (PTV) அதிகாரிகள், எசென்டன் மற்றும் பிராட்மீடோஸ் நிலையங்களுக்கு இடையில் கிரேகிபர்ன் பாதையில் அவசரகால சேவைகள் தேவைப்படும் ஒரு சம்பவம் காரணமாக ரயில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சேவைகள் பிற்பகல் 3 மணியளவில் இடைநிறுத்தப்பட்டது மற்றும் சிரமத்திற்கு உள்ளான பயணிகளுக்கு ரயில் சேவைகளுக்கு பதிலாக பேருந்துகள் பயன்படுத்தப்பட்டன.

பயணிகளின் பயணத்தில் சுமார் 45 நிமிடங்கள் தாமதமாகலாம் என்றும் பயணிகள் தெரிவிக்கின்றனர்.

Flinders St இலிருந்து Essendon வரையிலும், Broadmeadows to Craigieburn வரையிலும் ரயில்கள் தாமதத்துடன் இயக்கப்படுகின்றன.

சிறப்புத் தேவையுடைய பயணிகள் தங்கள் நிலையத்தை முன்கூட்டியே தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

(Visited 28 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித
error: Content is protected !!