ஜப்பானில் நில நடுக்கம் ஏற்படும் என அச்சம் – அரிசி வாங்கி குவிக்கும் மக்கள்
ஜப்பானில் நில நடுக்கம் ஏற்படுமோ என்ற அச்சத்தில் மக்கள் அரிசியை அதிகமாக வாங்கிக் குவிப்பதாகக் கூறப்படுகிறது.
பீதியில் மக்கள் அவ்வாறு செய்வதாக கூறப்படுகின்றது. அந்தப் போக்கை நிறுத்தச் சொல்லி அரசாங்கம் எச்சரித்திருக்கிறது.
அரிசியே ஜப்பானியர்களின் அன்றாட உணவாகும். நெற்பயிர் விளைச்சலைப் பேரிடர்கள் பாதித்துப் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்ற அச்சம் எழுந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
விளைச்சல் நிலையாய் உள்ளதாக வேளாண்துறை அமைச்சர் டெட்சுஷி சக்கமோட்டோ (Tetsushi Sakamoto) தெரிவித்தார்.
பற்றாக்குறையைச் சமாளிக்க விவசாயிகள் ஒரு வாரத்திற்கு முன்கூட்டியே அறுவடை செய்யலாம் என்றும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
(Visited 2 times, 1 visits today)