ஆசியாவிற்கு சுற்றுபயணத்தை மேற்கொள்ளும் பிரான்சிஸ்!

போப் பிரான்சிஸ் அடுத்த வாரம் தனது ஆசிய சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.
இதன்போது அவர் இந்தோனேசியாவின் சின்னமான இஸ்திக்லால் மசூதிக்கு செல்லவுள்ளதாக கூறப்படுகிறது.
87 வயதான கத்தோலிக்க திருச்சபையின் தலைவர், நாட்டின் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட ஆறு மதங்களின் பிரதிநிதிகளுடன் ஒரு சமயக் கூட்டத்தை நடத்துவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவருடைய பயண அட்டவணையின்படி, செப்டம்பர் மூன்றாம் திகதி ஜகார்த்தாவில் பயணத்தை துவங்கும் அவர், அங்கு இந்தோனேஷிய அதிபர் ஜோகோ விடோடோவை சந்திக்கிறார்.
இந்த பயணத்தை முடித்துக் கொண்டு பிலிப்பைன்ஸ் மற்றும் சீனாவிற்கு செல்லவுள்ளார்.
(Visited 48 times, 1 visits today)