பிரித்தானியாவில் இருந்து இலங்கை சென்றவருக்கு நேர்ந்த கதி

விடுதியில் தங்கியிருந்த பிரித்தானிய சுற்றுலா பயணி ஒருவர் பாம்பு கடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரித்தானிய சுற்றுலா பயணி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கண்டி, ரங்கல பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றின் தோட்டத்தில் நடந்து சென்ற போதே பாம்பு கடித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
55 வயதான பிரித்தானிய பிரஜை தற்போது தெல்தெனிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
எனினும் அவரது நிலைமை மோசமாக இல்லை எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
(Visited 12 times, 1 visits today)