தென் அமெரிக்க நாடொன்றில் எரிபொருளுக்குப் பற்றாக்குறை – விமானச் சேவைகள் இரத்து
தென்னமெரிக்க நாடான கொலம்பியாவில் எரிபொருளுக்குப் பற்றாக்குறையால் பல விமானச் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
கொலம்பியாவின் தேசிய விமான நிறுவனமான Avianca 24 விமானச் சேவைகளை ரத்துச் செய்யப்பட்டுள்ளது.
Sao Paulo , Santiago உள்ளிட்ட நகரங்களுக்கான விமானப் போக்குவரத்து தடைபட்டது.
மொத்தம் 36 விமானச் சேவைகளை ரத்துச் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதாகத் தென்னமெரிக்காவின் ஆகப் பெரிய விமான நிறுவனமான LATAM கூறியது.
மின்சாரக் கோளாற்றினால் எரிபொருள் உற்பத்தி பாதிக்கப்பட்டதாக கொலம்பியத் தேசிய எரிபொருள் நிறுவனம் கூறியது.
எரிபொருளை இறக்குமதி செய்யத் திட்டமிடப்படுகிறது. விமான நுழைவுச்சீட்டுகளின் விலை ஏறலாம் என்று போக்குவரத்து அமைச்சு கூறுகிறது.
(Visited 2 times, 1 visits today)