ஜெர்மனியில் இரட்டை பிரஜாவுரிமைக்கு பெற காத்திருப்பவர்களுக்கு முக்கிய தகவல்
ஜெர்மனியில் இரட்டை பிரஜாவுரிமையை பெறுவதற்கு அதிகமானவர்கள் விண்ணப்பித்து வருகின்றார்கள்.
ஜெர்மனியில் இரட்டை பிரஜா உரிமை சட்டமானது கடந்த ஜுன் மாதம் 27 ஆம் திகதியில் இருந்து நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜெர்மனியில் இரட்டை பிரஜா உரிமையை பெறுவதற்கு பலர் ஆர்வம் காட்டி வருவதாக தெரியவந்துள்ளது.
தற்பொழுது பல்லாயிரக்கணக்கானவர்கள் இரட்டை பிரஜா உரிமையை பெறுவதற்கு தமது விண்ணப்பங்களை மேற்கொண்டு வருவதாக தெரியவந்துள்ளது.
பாடன்புட்டன் மாநிலத்தில் உள்ள போடன்ஸ்வே என்று சொல்லப்படுகின்ற பிரதேசத்திற்கு பொறுப்பான வெளிநாட்டு காரியாலயமானது தாம் தற்பொழுது பிரஜா உரிமைக்குரிய விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதில் தற்காலிகமாக இடை நிறுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
2020 ஆம் ஆண்டு குறித்த பிரதேசத்தில் 390 பேருக்கு பிரஜா உரிமை வழங்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை, 2021 ஆம் ஆண்டு 618 பேருக்கு பிரஜா உரிமை வழங்கப்பட்டதாகவும், 2022 ஆம் ஆண்டு 155 பேருக்கு இவ்வாறு பிரஜா உரிமை வழங்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.