தென்னாப்பிரிக்காவில் 40 ஆண்டுகளுக்கு பிறகு விடுதலை பெற்ற யானை
தென்னாப்பிரிக்காவில் உள்ள உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த ஒரே யானை 40 ஆண்டுகளுக்கு பிறகு காட்டுக்குள் விடப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்காவின் தேசிய உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த ‘சார்லி’ என்ற யானை 1984 ஆம் ஆண்டு ஜிம்பாப்வேயின் ‘ஹ்வாங்’ தேசிய பூங்காவில் இரண்டு வயதாக இருக்கும் போது பிடிபட்டது.
பின்னர், தென்னாப்பிரிக்காவில் உள்ள போஸ்வெல் வில்கி சர்க்கஸ் குழுவால் யானைக்கு சர்க்கஸ் பயிற்சி அளிக்கப்பட்டது.
எவ்வாறாயினும், விலங்குகள் நலக் குழுக்களின் முறைப்பாடுகள் காரணமாக இந்த விலங்கு விடுவிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
(Visited 8 times, 1 visits today)