செய்தி வட அமெரிக்கா

இந்தியாவிற்கு நீர்மூழ்கி எதிர்ப்பு போர் கருவிகளை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல்

அமரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டின் அழைப்பின் பேரில் 4 நாட்கள் பயணமாக இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கின் புதிய விற்பனையை அங்கீகரித்துள்ளார்.

இந்த ஒப்பந்தத்தில் நீர்மூழ்கி எதிர்ப்பு சோனோபாய் கருவிகள் இந்தியாவுக்கு விற்கப்பட உள்ளது.

இந்திய எல்லையில் சீன ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில் இந்த கருவிகள் இந்தோ பசிபிக் கடற்பகுதியில் இந்தியாவின் பாதுகாப்பு திறனை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ராஜ்நாத் சிங் இந்த பயணத்தின்போது அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் லாயிட் ஆஸ்டின், தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமெரிக்க அதிபரின் உதவியாளர் ஜாக் சல்லிவனையும் சந்திக்கிறார்.

பாலஸ்தீன போர், மேற்கு வங்காள விவகாரம் உள்ளிட்டவற்றைக் குறித்து அவர்களுடன் கலந்துரையாட உள்ளார்.

ராஜ்நாத் சிங்கின் இந்தப் பயணம் இந்தியா-அமெரிக்கா இடையிலான விரிவான உலகளாவிய பாதுகாப்பு கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

(Visited 23 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!