தாய்லாந்தில் விமான விபத்து – 9 பேர் உயிரிழப்பு

தாய்லாந்து தலைநகர் பெங்கொக் அருகே சதுப்பு நிலப்பகுதியில் சிறு ரகபயணிகள் விமானமொன்று வீழ்ந்து நொறுங்கியதில், அதில் பயணத்த 9 பேரும் உயிரிழந்துள்ளனர்.
பெங்கொக்கின் ஸ்வர்ணபூமி விமான நிலையத்திலிருந்து டிராட் மாகாணத்துக்கு பயணித்த “தாய்” விமான சேவை என்ற தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான குறித்த விமானத்தில் சீனாவைச் சேர்ந்த 5 சுற்றுலாப் பயணிகள், 2 விமானிகள் உட்பட தாய்லாந்தைச் சேர்ந்த 4 பேர் இருந்துள்ளனர்.
குறித்த விமானம் புறப்பட்ட 11 நிமிடங்களில் விமானத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்து நேர்ந்த இடத்தில் தாய்லாந்து பொலிஸாரும், தடயவியல் நிபுணர்களும், மீட்புக் குழுவினரும் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
(Visited 30 times, 1 visits today)