TikTok மீதான தடையை நீக்கியது நேபாள அரசு!

“சமூக நல்லிணக்கத்தை” சீர்குலைப்பதற்காக கடந்த நவம்பரில் வீடியோ பகிர்வு செயலியான TikTok மீது விதிக்கப்பட்ட தடையை நீக்க நேபாள அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
அமைச்சரவைக் கூட்டத்தின் போது கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான முடிவு அரசாங்கத்தால் எடுக்கப்பட்டது என்று தகவல் அமைச்சர் பிரித்வி சுப்பா குருங்கை மேற்கோள் காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
பிரதம மந்திரி கட்கா பிரசாத் ஒலியின் முன்முயற்சியின் கீழ், அனைத்து சமூக வலைப்பின்னல் தளங்களும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்ததாகவும் நிறுவனம் கூறியது.
முந்தைய அரசாங்கம் கடந்த ஆண்டு நவம்பரில் டிக்டோக்கிற்கு தடை விதித்தமை குறிப்பிடத்தக்கது.
(Visited 16 times, 1 visits today)