தமிழர்களை தவறாக வழிநடத்துவதால் எமக்கு எந்த நன்மையும் இல்லை – நாமல்
தனது ஆட்சியின் கீழ் மாகாண சபைகளுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட மாட்டாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் தனது முதல் மாநாட்டில் உரையாற்றிய நாமல், தங்கள் அரசாங்கம் ஒரு சதியால் கவிழ்க்கப்பட்டதாக தான் நம்புவதாகவும், எனினும், அவர்கள் அரசை வீழ்ச்சியடைய விடவில்லை என்றும் கூறினார்.
இது குறித்து அவர் மேலும் பேசுகையில், “இந்த பௌத்த நாட்டில் அனைத்து மதங்களையும் மதிக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.
மாகாண சபைகளுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை பகிர்ந்தளிக்க மாட்டோம்.
வடக்கில் உள்ள எமது தமிழ் மக்களை தவறாக வழிநடத்துவதன் மூலம் எமக்கு எதனையும் பெற்றுக் கொள்ள முடியாது” என்றார்.
“நாம் என்ன செய்ய முடியும் மற்றும் என்ன செய்ய முடியாது என்பதில் நாம் வெளிப்படையாக இருக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.