ஒலிம்பிக்கில் கிரிக்கெட் – மகிழ்ச்சியில் ஸ்டீவ் ஸ்மித்
ஒலிம்பிக் கிரிக்கெட் போட்டியில் இடம்பெற்று விளையாடுவது சிறப்பான விஷயம்’ என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் வரும் 2028 ஆம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட் இடம்பெறும் என சர்வதேச ஒலிம்பிக் குழு தரப்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுகுறித்த மற்ற தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் ஒலிம்பிக் கிரிக்கெட் போட்டியில், ஆஸ்திரேலிய சார்பில் இடம்பெற்று விளையாடுவது சிறப்பான விஷயமாக இருக்குமென கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் பேசியதாவது;
‘இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு டி20 கிரிக்கெட்டில் நான் விளையாடலாம். உலகெங்கிலும் டி20 லீக் தொடர்கள் நடைபெற்று வருவதால், மற்ற வீரர்களைக் காட்டிலும் என்னால் தொடர்ச்சியாக டி20 போட்டிகளில் விளையாட முடியும் என நினைக்கிறேன். அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு டி20 போட்டிகளில் விளையாடுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளேன். இந்த ஒப்பந்தம் முடிந்த ஓராண்டில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன. ஒலிம்பிக்கின் ஒருபகுதியாக இருப்பது நன்றாக இருக்கும்’ என்றார்.
அண்மையில் நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீங் ஸ்மித் இடம்பெறாதது குறிப்பிடதக்கது.