பிரித்தானியாவில் ஆரம்ப பள்ளி பாடத்திட்டத்தை சீர்த்திருத்த நிபுணர்கள் வழங்கும் யோசனை!
பிரித்தானியாவில் ஆரம்பப் பள்ளி மாணவர்கள் ஐஸ் லாலி சாப்பிடுவதற்கும், மரக்கறிகளை நடுவதற்கும் அதேபோல் ரொட்டிக்கான மா கலவையை பிசைவதற்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மூன்று முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கான திட்டங்களில் நிழலுடன் விளையாடுவது, மண்ணைத் தோண்டுவது, தோட்ட மையங்களுக்குச் செல்வது, மறுசுழற்சி செய்தல் மற்றும் இசைக்கருவிகளை வாசிப்பது போன்ற தொடர்ச்சியான “அத்தியாவசிய அனுபவங்களை” உள்ளடக்குமாறு நான்கு பெரிய அறிவியல் அமைப்புகள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளன.
ராயல் சொசைட்டி ஆஃப் கெமிஸ்ட்ரி, இன்ஸ்டிடியூட் ஆஃப் பிசிக்ஸ், ராயல் சொசைட்டி ஆஃப் பயாலஜி மற்றும் அசோசியேஷன் ஃபார் சயின்ஸ் எஜுகேஷன் ஆகியவை அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (ஸ்டெம்) கல்வியில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை குறைக்கும் முயற்சியில் ஆரம்ப பள்ளி பாடத்திட்டத்தை சீர்திருத்த பரிந்துரைகளை வெளியிட்டுள்ளன.
குறித்த பரிந்துரைகளின் மேற்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். “இது ஒரு அடிப்படை சமபங்கு பிரச்சினை என வலியுறுத்தும் நிபுணர்கள் வளமான அத்தியாவசிய அனுபவங்களை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.