எரிசக்தி கட்டமைப்புகளை குறிவைத்து தாக்கும் ரஷ்யா : மின்வெட்டினால் அவதியுறும் உக்ரைன் மக்கள்!
உக்ரேனிய எரிசக்தி உள்கட்டமைப்புகளை குறிவைத்து ரஷ்யா நடத்திய தாக்குதலில் 20,000 மக்கள் மின்வெட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு சுமி பகுதியில் ஒரே இரவில் நடத்தப்பட்ட தாக்குதலில் 72 நகரங்கள் மற்றும் கிராமங்களில் 18,500 பேர் மின்சாரம் இல்லாமல் தவித்ததாக பிராந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.
உக்ரைனின் ஊடுருவலுக்குப் பிறகு சுமி மீதான குண்டுவெடிப்புத் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. உக்ரேனிய எரிசக்தி வசதிகள் கடந்த ஆறு மாதங்களில் ரஷ்ய தாக்குதல்களின் தினசரி இலக்காக உள்ளன.
இந்நிலையில் கடந்த காலங்களை விட மின் வெட்டு அதிகரித்துள்ளதாக கூறப்படுவதுடன், தற்போது மாலை வேலைகளில் மின்வெட்டு மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.
(Visited 2 times, 1 visits today)