செய்தி தமிழ்நாடு

விஷவாயு தாக்கி இருவர் பலி

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சியில் அடங்கிய நேதாஜி நகர் 18வது வார்டில் இயங்கி வரும் தனியார் பள்ளியான இம்மானுவேல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிற்பகல்,

கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக மீஞ்சூர் பேரூராட்சி நிர்வாகத்தில் பணிபுரிந்து வரும் கோவிந்தன் (45) மற்றும் சுப்புராயலு (45) இருவரும் கழிவு நீர் தொட்டியில் இறங்கி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது,

விஷவாயு தாக்கி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். தகவல் அறிந்து தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இரு உடல்களையும் கைப்பற்றி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.

இதுகுறித்து மீஞ்சூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்த நிலையில் தகவல் அறிந்த ஆவடி காவல்துறை ஆணையரும் இணை ஆணையர் விஜயகுமாரும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

சம்பவத்துக்கு காரணமான பள்ளி தாளாளரான சிமியோன் விக்டர் என்பவரை மீஞ்சூர் போலீசார் கைது செய்து தற்போது மீஞ்சூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

விசாரணையின் போது மீஞ்சூர் பேரூராட்சி நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் தனது பள்ளிக்கு வந்து துப்புரவு பணி மேற்கொண்டதாக கூறுயுள்ளார்.

மேலும் மீஞ்சூர் பேரூராட்சி நிர்வாகத்தினர் இன்று விடுமுறை நாள் என்பதாலும் இது தொழிலாளர் தினம் என்பதாலும் எந்த ஒரு துப்புரவு பணியாளரும் தாங்கள் பணிக்கு நியமிக்கவில்லை என கூறுகின்றனர்.

உழைப்பாளர் தினமான இன்று இரண்டு தொழிலாளர்கள் மரணமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

(Visited 21 times, 1 visits today)

NR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி