ஹரின் மற்றும் மனுஷ ஜனாதிபதியின் ஆலோசகர்களாக நியமனம்

முன்னாள் அமைச்சர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் ஜனாதிபதியின் ஆலோசகர்களாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
விளையாட்டு, காணி மற்றும் சுற்றுலா விவகாரங்களுக்கான ஆலோசகராக ஹரீன் பெர்னாண்டோவும், தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஆலோசகராக மனுஷ நாணயக்காரவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அரசியலமைப்பின் 41(1) பிரிவின் பிரகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாகவே இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தினசரி செய்திகள் தெரிவிக்கின்றன .
ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார இருவரையும் கட்சியில் இருந்து நீக்கும் SJBயின் முடிவை உச்சநீதிமன்றம் உறுதி செய்ததையடுத்து, முன்னதாக அவர்களது எம்.பி மற்றும் அமைச்சர் பதவிகளை இழந்தனர்.
(Visited 10 times, 1 visits today)