அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் – கமலா ஹாரிஸை கடுமையாக விமர்சித்த டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கமலா ஹாரிஸை, முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடனை காட்டிலும் கமலா ஹாரிஸை தம்மால் சுலபமாக வீழ்த்திவிட முடியும் என டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
பென்சில்வேனியாவில் நடந்த பிரச்சார கூட்டத்தில், தீவிர இடதுசாரியைபோல் கமலா ஹாரிஸ் பேசிவருவதாக கூறிய டிரம்ப், கடும் விலைவாசி உயர்வுக்கு ‘தோழி’ கமலா ஹாரிஸ் தான் காரணம் என்றும் விமர்சித்தார்.
மேலும் கமலா ஹாரிஸை விட தாம் அழகாக இருப்பதாகவும் டிரம்ப் கூறினார்.
(Visited 22 times, 1 visits today)