பிரிட்டிஷ் அட்லாண்டிக் பிரதேசத்தில் தாக்கம் செலுத்தும் சூறாவளி : மக்களுக்கு எச்சரிக்கை!

எர்னஸ்டோ சூறாவளி, சிறிய பிரிட்டிஷ் அட்லாண்டிக் பிரதேசமான பெர்முடாவில் தாக்கம் செலுத்தியுள்ளது.
இதன்போது அதிகபட்சமாக 85 mph (140 kph) வேகத்தில் காற்று வீசியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமெரிக்க தேசிய சூறாவளி மையம் பலத்த காற்று, ஆபத்தான புயல் எழுச்சி மற்றும் குறிப்பிடத்தக்க கடலோர வெள்ளம் குறித்து எச்சரித்துள்ளது.
பெர்முடாவில் 6 முதல் 9 அங்குலம் (150-225 சென்டிமீட்டர்) மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. “இந்த மழையானது கணிசமான உயிருக்கு ஆபத்தான திடீர் வெள்ளத்தை ஏற்படுத்தும் எனவும் முன்னறிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 25 times, 1 visits today)