இந்தோனேசியாவில் மலைப்பாம்பு தாக்கியதில் உயிரிழந்த 71 வயது மூதாட்டி
இந்தோனேசியாவின் மத்தியப் பகுதியில் மலைப்பாம்பு தாக்கியதில், 74 வயது மூதாட்டி ஒருவர் உயிரிழந்ததாக காவல்துறையினரும் உள்ளூர் அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.
அண்மைய மாதங்களில் நேர்ந்த மூன்றாவது அத்தகைய மரணம் அது.
‘மாகா’ என்ற அந்த மூதாட்டி, ஆகஸ்ட் 14ஆம் திகதி வீடு திரும்பாததால் கவலையில் ஆழ்ந்த உறவினர்கள் அவரைத் தேடத் தொடங்கினர்.
“பாம்பு இறுக்கி, கடித்ததால் அவர் உயிரிழந்திருக்கக்கூடும்,” என்று தெற்கு சுலவேசி தீவில் உள்ள பலொப்போ நகரக் காவல்துறைப் பேச்சாளர் சுப்பிரியாடி கூறினார்.
மரணத்தை ஏற்படுத்தி இருக்கக்கூடிய பாம்பு, நான்கு மீட்டர் நீளமான மலைப்பாம்பு என்று அவர் ‘ஏஎஃப்பி’ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
வயலில் வேலை செய்த பிறகு, அந்த மூதாட்டி தலையிலும் கால்களிலும் பாம்புக்கடியுடன் கண்டெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
அந்த மூதாட்டியின் மகள் அவரது உடலைக் கண்டுபிடித்ததாகவும், அவருக்கு அருகிலேயே பாம்பு இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
உள்ளூர்வாசிகள் அந்தப் பாம்பை அடித்துக் கொன்றதாகவும் கூறப்படுகிறது.