சிங்கப்பூரில் அடுத்த கட்டம் நோக்கி செல்லும் AI – ஆய்வுக்கு உருவாகும் புதிய நிலையம்
சிங்கப்பூரின் செயற்கை நுண்ணறிவு திட்டங்கள் அடுத்த கட்டம் நோக்கிச் சீராக முன்னேறும் நிலையில் புதிய நிலையம் ஒன்று உருவாக்கப்படவுள்ளது.
குவான்ட்டம் எனும் நுண்துகள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்தும் நாடு யோசித்து வருகின்றது.
தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் Josephine Teo இதனை கூறினார்.
அடுத்த ஆண்டில் செயற்கை நுண்ணறிவு ஆய்வு, புத்தாக்கம் ஆகியவற்றுக்கென புதிய நிலையத்தை தொடங்கவும் திட்டமுள்ளது.
சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம், அமெரிக்காவின் IBM நிறுவனம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் ஆய்வு நிலையம் உருவாகும். தேசியப் பல்கலையின் கணினியியல் பள்ளியில் புதிய ஆய்வு நிலையம் அமைந்திருக்கும்.
தொடக்கமாகப் பசுமை, பாதுகாப்பு போன்ற துறைகளில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது குறித்து நிலையம் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளும் என குறிப்பிடப்படுகின்றது.