துருக்கியில் உச்சம் தொடும் வெப்பநிலை : வரும் வாரத்தில் பிரித்தானிய மக்களுக்கு ஏற்படும் பாதிப்பு!
துருக்கியில் நிலவும் கடுமையான வெப்பநிலை 40C எட்டிய நிலையில் இந்த வெப்பநிலை வரும் திங்கட் கிழமை வரை நீட்டிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ் வெப்பநிலையானது பிரித்தானியாவிலும் தாக்கம் செலுத்தும் என முன்னறிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் சில பகுதிகளில் வெப்பநிலையானது 27C ஆக உயரக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துருக்கியின் மேற்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்ததை விட நான்கு முதல் ஆறு டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகமாக இருப்பதாக முன்னறிவிப்பாளர்கள் கூறுகின்றனர்.
அஸோர்ஸ் உயர் அழுத்த அமைப்பினால் வெப்ப தாக்கம் அதிகரித்துள்ளது. இது ஆப்பிரிக்காவில் இருந்து துருக்கியின் தென்மேற்கு பகுதிகளுக்கு சூடான காற்றை செலுத்துகிறது.
இப்போது அந்த வெப்பக் காற்றில் சில அடுத்த வார தொடக்கத்தில் UK க்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.