விவாகரத்தை குறைக்க சீனாவில் அறிமுகமாகவுள்ள புதிய சட்டம்
தம்பதிகள் தங்களது திருமணத்தை எளிதாக பதிவு செய்ய சீனா புதிய சட்ட மசோதாவை உருவாக்கவுள்ளது. அதேபோல் விவாகரத்தை எளிதாக பெறக்கூடாது என்பதிலும் சீனா கவனம் செலுத்தியுள்ளது.
இந்த புதிய மசோதா விரைவில் சட்டமாகும் என்பதால் கடந்த சில நாள்களாக சீனாவில் இது தொடர்பாக பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.
விவாகரத்து தொடர்பான சட்டத்திற்கு இணையவாசிகள் பலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
அன்பான குடும்ப சமூகத்தை உருவாக்குவதுதான் புதிய சட்டத்தின் நோக்கம் என்று சீனா தெரிவித்துள்ளது. மசோதாவின் வரைவு பொதுமக்களிடம் இவ்வாரம் காட்டப்படும் என்றும் அதன் பிறகு அவர்கள் தரும் கருத்துகள் பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
செப்டம்பர் 11ஆம் திகதிக்குள் சீன மக்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்யலாம் என்று அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்தது.
சீனாவில் கடந்த 2 ஆண்டுகளாக மக்கள் தொகையும் திருமணம் செய்யும் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்து வருகிறது. இதனால் புதிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறினர்.