பிரான்ஸில் பஞ்சுக்குள் சிக்கிய மர்மம் – சோதனையிட்டவர்கள் அதிர்ச்சி
பிரான்ஸில் இதுவரை இல்லாத அளவு தடைசெய்யப்பட்ட சிகரெட் பெட்டிகளை சுங்கவரித்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
இது ச்சுங்கவரித்துறையினரால் இவ்வருடத்தில் கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய தொகையாகும்.
இச்சம்பவம் தெற்கு பிரான்சின் Millau (Aveyron) நகரில் இடம்பெற்றுள்ளது.
புதன்கிழமை மாலை A75 நெடுஞ்சாலையில் சுங்கவரித்துறையினர் வீதி கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்துக்கிடமான பார ஊர்தி ஒன்று பயணிப்பதை பார்த்து, அதனை தடுத்து நிறுத்தினர்.
சாரதியிடம் விசாரணைகள் மேற்கொண்டபோது, முகக்கவச்சம் தயாரிப்பதற்குரிய பஞ்சுகளை ஏற்றிச் செல்வதாக தெரிவித்துள்ளார்.
அவரது பதிலில் திருத்தியடையாத சுங்கவரித்துறையினர், பார ஊர்தியின் பெட்டியை திறந்த சோதனை செய்தனர். அதன்போது, பஞ்சுப்பெட்டிகளுக்கு பின்னால் சிகரெட் பெட்டிகள் மறைத்து எடுத்துச் செல்வது கண்டறியப்பட்டது.
பிரான்சில் விற்பனைத் தடை விதிக்கப்பட்டுள்ள சிகரெட்டுகளே இவ்வாறு மறைத்து எடுத்துச்செல்லப்பட்டிருந்தன. மொத்தமாக 8,903 பொதிகளில் 1,780 கிலோ எடையுள்ள சிகரெட் பெட்டிகள் மீட்கப்பட்டன.