சீனாவுக்கு ராணுவ ரகசியத்தை விற்ற குற்றத்தை ஒப்புக்கொண்ட அமெரிக்க அதிகாரி
சீனாவுக்கு அமெரிக்க ராணுவத்தின் ரகசியங்களை விற்றதாக அந்நாட்டு ராணுவ உளவுத்துறை அதிகாரியான கோர்பீன் ஷுல்ட்ஸ் மீது மார்ச் மாதம் குற்றம் சுமத்தப்பட்டது.
தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை கோர்பீன் ஆகஸ்ட் 13ஆம் திகதி (செவ்வாய்க்கிழமை) ஒப்புக்கொண்டதாக அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது.
தேசிய பாதுகாப்புத் தகவல்களை வெளியிட சதி செய்ததாகவும் உரிமம் இல்லாமல் தற்காப்புக் கட்டுரைகளையும் தொழில்நுட்பத் தரவுகளையும் ஏற்றுமதி செய்ததாகவும் அரசு அதிகாரி ஒருவருக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் கோர்பீன்மீது குற்றம் சுமத்தப்பட்டது.
கைது செய்யப்படுவதற்கு முன்பு, ரகசிய ராணுவ ஆவணங்கள் என வகைப்படுத்தப்படாத பல முக்கியமான மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட ஆவணங்களைச் சீனாவுக்கு அனுப்பியதாக அமெரிக்க நீதித்துறை கூறியது.
இதற்காக, அவருக்குச் சுமார் $42,000 அமெரிக்க டொலர் கொடுக்கப்பட்டதாகவும் அது தெரிவித்தது.
2025ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் திகதி அவருக்குத் தண்டனை விதிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.