பதவி நீக்கப்பட்ட ஹரின் மற்றும் மனுஷ : நாடாளுமன்ற வெற்றிடம் தொடர்பில் வெளியான தகவல்

நாடாளுமன்ற உறுப்பினர்களான மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோரின் நாடாளுமன்ற ஆசனங்கள் இரத்து செய்யப்பட்டதன் காரணமாக வெற்றிடமான இரண்டு நாடாளுமன்ற ஆசனங்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
1981 ஆம் ஆண்டு 1 ஆம் இலக்க பாராளுமன்ற தேர்தல் சட்டத்தின் 64(1) மற்றும் 64(5) ஆகிய பிரிவுகளின் பிரகாரம் இரண்டு வெற்றிடங்கள் தொடர்பில் பாராளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன எழுத்து மூலம் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவருக்கு அறிவித்துள்ளார்.
காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார மற்றும் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ ஆகியோரை கட்சியில் இருந்து நீக்குவதற்கான சமகி ஜன பலவேகய (SJB) தீர்மானம் சட்ட ரீதியாக செல்லுபடியாகும் என உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
(Visited 20 times, 1 visits today)