இலங்கை ஜனாதிபதித் தேர்தலை கண்காணிக்க சர்வதேச கண்காணிப்பாளர்களுக்கு அனுமதி
2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள இலங்கை ஜனாதிபதித் தேர்தலை கண்காணிக்க சர்வதேச கண்காணிப்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் (EU) மற்றும் பொதுநலவாய நாடுகளின் தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கு வாக்கெடுப்பை கண்காணிக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் R.M.A.L ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
சங்கங்கள் விடுத்த கோரிக்கைக்கு இணங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
இதன்படி எதிர்வரும் நாட்களில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பொதுநலவாய நாடுகளின் தேர்தல் கண்காணிப்பு குழுக்கள் விஜயம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு ஒதுக்கப்பட்ட பணமே போதுமானது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அதிக வேட்பாளர்கள் களமிறங்கினாலும் அது ஜனாதிபதித் தேர்தலுக்குப் பிரச்சினையாக இருக்காது என இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.