நான்காவது முறையாக பதவியேற்ற ருவாண்டா ஜனாதிபதி போல் ககாமே
கடந்த மாதம் நடைபெற்ற தேர்தலில் 99 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளுடன் ருவாண்டா ஜனாதிபதி போல் ககாமே வெற்றி பெற்று நான்காவது முறையாக பதவியேற்றுள்ளார்.
கிகாலியில் நிரம்பிய 45,000 இருக்கைகள் கொண்ட அரங்கத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த பல நாட்டுத் தலைவர்கள் மற்றும் பிற முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்..
“அமைதி மற்றும் தேசிய இறையாண்மையைப் பாதுகாப்போம், தேசிய ஒற்றுமையை உறுதிப்படுத்துவோம்” என்று உறுதிமொழி அளித்து, தலைமை நீதிபதி ஃபாஸ்டின் என்டெசிலியாயோ முன் ககாமே பதவிப் பிரமாணம் செய்தார்.
1994 இனப்படுகொலையில் இருந்து சிறிய ஆப்பிரிக்க தேசத்தை முதலில் நடைமுறை தலைவராகவும் பின்னர் ஜனாதிபதியாகவும் ஆட்சி செய்து வரும் ககாமேக்கு ஜூலை 15 வாக்கெடுப்பின் முடிவு ஒருபோதும் சந்தேகத்திற்கு இடமில்லை.
அவர் 99.18 சதவீத வாக்குகளில் வெற்றி பெற்று இன்னும் 5 ஆண்டுகள் ஆட்சியில் இருப்பார் என தேசிய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
66 வயது முதியவரின் அமோக வெற்றி ருவாண்டாவில் ஜனநாயகம் இல்லாததை அப்பட்டமாக நினைவூட்டுவதாக உரிமை ஆர்வலர்கள் தெரிவித்தனர்.