துருக்கியில் மீண்டும் பாவனைக்கு வந்த இன்ஸ்டாகிராம்!
துருக்கியில் இன்ஸ்டாகிராம் மீண்டும் பாவனைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தகவல் தொடர்பு தொழில்நுட்ப ஆணையம், குறிப்பிட்ட காரணத்தை தெரிவிக்காமல் இன்ஸ்டாகிராம் அணுகலை ஆகஸ்ட் 2 அன்று தடை செய்தது.
சமூக ஊடக தளம் துருக்கிய சட்டங்களை பின்பற்றத் தவறியதால் தடை விதிக்கப்பட்டதாக அரசு அதிகாரிகள் பின்னர் தெரிவித்திருந்தனர்.
இன்ஸ்டாகிராம் அதிகாரிகளுடனான எங்கள் பேச்சுவார்த்தையில், எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று உறுதியளிக்கப்பட்ட நிலையில் மீண்டும் பாவனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
(Visited 4 times, 1 visits today)