தைவானில் கரப்பான்பூச்சியால் நேர்ந்த கோர விபத்து
தைவானில் கரப்பான்பூச்சியால் கோர விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
தைவானில் கார் ஓட்டிக் கொண்டிருந்த நபர் மீது கரப்பான்பூச்சி விழுந்ததால் விபத்து நேர்ந்துள்ளது.
கரப்பான்பூச்சியைப் பார்த்து பயந்துபோன அவர் கட்டுப்பாட்டை இழந்து தமது Mercedes-Benz சொகுசுக் காரை வேலி மீது மோதியதாக தெரியவந்துள்ளது.
விபத்தில் அந்த 42 வயது நபருக்குக் காயம் ஏற்படவில்லை. அவர் மதுபானம் அருந்தவில்லை என்பது பரிசோதனையில் உறுதியானது.
விபத்தின் காணொளி பரவலாகப் பகிரப்பட்டது. இணையவாசிகளில் பலர் அவரது சூழ்நிலையைப் புரிந்துகொள்ள முடிவதாகக் கூறினர்.
“இப்படித்தான் சைக்கிள் ஓட்டிக்கொண்டிருந்தபோது என் தலைக்கவசத்தின் மீது கரப்பான்பூச்சி ஊர்ந்துசென்றது” என்று அவர்களில் ஒருவர் கூறினார்.
“கார் ஓட்டிக்கொண்டிருந்தபோது குளவி ஒன்று சன்னல் வழியாகப் பறந்துவந்ததால் பதற்றம் அடைந்தேன்” என்று இன்னொருவர் கூறியிருக்கிறார்.