ஜெர்மனியில் கல்வியை நிறைவு செய்யாத மாணவர்களால் கடும் நெருக்கடி நிலை
ஜெர்மனியில் 1.2 மில்லியன் இளைஞர், யுவதிகள் தமது பாடசாலை கல்வியையோ அல்லது தொழிற்கல்வியையோ முற்றாக நிறைவு செய்யாமல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெர்மனியில் லட்ச கணக்கான மாணவர்கள் பல்கலைகழக கல்வியை நிறைவு செய்யாமல் இருப்பதாக புள்ளி விபரம் வெளியாகியுள்ளது.
ஜெர்மனியில் இளைஞர் யுவதிகளின் தொகையில் 8.6 சதவீதமாக காணப்படுவதாக தெரியவந்துள்ளது.
மொத்தமாக 13.4 மில்லியன் இளைஞர் யுவதிகள் இருக்கும் பொழுது 1.2 மில்லியன் பேர் கல்வியை முற்று பெறாமல் உள்ள நிலையானது மிகவும் அபாயகரமான சூழ்நிலையாக காணப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜெர்மனியில் பயிற்றப்பட்ட தொழிலாளர்களுக்கு பற்றாக்குறை நிலவி வருகின்றது.
இந்த நிலையில் இவ்வாறு இளைஞர் யுவதிகள் தமது கல்வியையோ அல்லது தொழிற்கல்வியையோ முற்றாக நிறைவு செய்யாமல் காணப்படுகின்றது. இந்த விடயம் நாட்டிற்கு சிறந்த விடயம் அல்ல என்றும் தெரிவிகக்கப்பட்டுள்ளது.
அதாவது இளைஞர்களின் மத்தியில் பல்கலைகழகம் அல்லது தொழிற்கல்வி தொடர்பில் ஆர்வமற்று காணப்படுவதாக தெரியவந்துள்ளது. அவர்களை ஊக்குவிப்பதற்கு கல்வி அமைச்சானது திட்டங்களை மேற்ககொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.