இலங்கை: ‘ஜனாதிபதியை ஆதரித்து தற்கொலைப் பணியில் ஈடுபட்டோம்’: ஹரின் பகிரங்கம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக தானும் மனுஷாவும் தற்கொலைப் பணியில் ஈடுபட்டதாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்த முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அந்த நேரத்தில் ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதன் பின்விளைவுகளை தாங்கள் அறிந்திருந்ததாகவும், எனினும் நாட்டு நலனுக்காக இந்த சவாலை தாங்கள் ஏற்றுக்கொண்டதாகவும் அவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
ஜனாதிபதியைப் போன்று தானும் மனுஷ நாணயக்காரவும் இன்று முதல் சுதந்திரமாக செயற்படுவோம் என தெரிவித்த பெர்னாண்டோ, புதிய அரசியல் பயணமொன்றை ஆரம்பிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
(Visited 16 times, 1 visits today)