இலங்கை

இலங்கை: மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ பதவி விலகல்

சுற்றுலா, காணி, விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் தொழில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோர் தங்களது அமைச்சுப் பதவிகளிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.

அமைச்சர்களான மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோரின் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தி எடுத்த தீர்மானம் சட்டபூர்வமானது என உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்த பின்னணியில் குறித்த இருவரும் பதவி விலகுவதாக அறிவித்துள்ளனர்.

மனுஷ நாணயக்கார பதவியை இழந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்தை பந்துலால் பண்டாரிகொட. நிரப்பவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோவுக்குப் பதிலாக தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றத்திற்கு வருபவர் யார் என்பதை கட்சியின் சிரேஷ்டர்கள் விரைவில் கூடி தீர்மானிக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன தெரிவித்துள்ளார்.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!