பாரிஸ் ஒலிம்பிக் போட்டி 2024 : பதக்கம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை!
பிரான்ஸ் – பாரீஸ் 2024 பதக்கங்களின் தரம் மோசமடையத் தொடங்கியதை அடுத்து, ஒலிம்பிக் ஸ்கேட்போர்டர் ஒருவர் அதை விமர்சித்துள்ளார்.
ஜூலை 29 அன்று நடந்த ஆண்களுக்கான தெரு ஸ்கேட்போர்டிங் இறுதிப் போட்டியில் மூன்றாவது இடத்தைப் பிடித்த வீரருக்கு வழங்கப்பட்ட வெண்கலப் பதக்கம் அதன் நிறத்தை இழந்துவிட்டதாக அமெரிக்க தடகள வீரர் நைஜா ஹஸ்டன் வெளிப்படுத்தியுள்ளார்.
“இந்த ஒலிம்பிக் பதக்கங்கள் புத்தம் புதியதாக இருக்கும் போது அழகாக இருக்கும். ஆனால் அந்த பதக்கமானது நினைப்பது போல் உயர் தரத்தில் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.
பாரிஸ் ஜூவல்லரி ஹவுஸ் Chaumet வடிவமைத்துள்ள இந்த பதக்கம், 18 கிராம் அறுகோண டோக்கனைக் கொண்டுள்ளது. இது ஈபிள் கோபுரத்திலிருந்து எடுக்கப்பட்ட இரும்பிலிருந்து தயாரிக்கப்படுகிறது.
மையப்புள்ளி டோக்கன் ஒளிக்கதிர்களைத் தூண்டும் இறுக்கமான பள்ளங்களால் சூழப்பட்டுள்ளது.