தப்பி ஓடிய 09 சிறுமிகளும் பொலிஸ் காவலில்

நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமான கெப்பிட்டிபொல தடுப்பு முகாமில் இருந்து 09 சிறுமிகள் இன்று (08) அதிகாலை தப்பிச் சென்றுள்ளனர்.
பின்னர், நுவரெலியாவில் தங்கியிருந்த நிலையில் வெலிமடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
09 சிறுமிகளும் நாளை (09) வெலிமடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
(Visited 25 times, 1 visits today)