8 இலட்சத்து 40 ஆயிரம் அமெரிக்க டொலர்களை மோசடி செய்த இலங்கை மருத்துவர்!

அமெரிக்காவின் ஸ்ட்ராட்ஃபோர்ட் நகரில் மருத்துவ நிலையம் ஒன்றை நடத்தி வந்த இலங்கை மருத்துவர் ஒருவர் சுகாதார சேவைகளை வழங்குவதாக தெரிவித்து அந்நாட்டு அரசாங்கத்திடமிருந்து சுமார் 840000 அமெரிக்க டொலர்களை மோசடியாக பெற்றுள்ளார்.
இதனால் அவருக்கு பிரிட்ஜ்போர்ட் நீதிமன்றமொன்று நான்கு வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது.
இலங்கையைச் சேர்ந்த குறித்த மருத்துவர் கடந்த நவம்பரில் மோசடி குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதால் தண்டனை நிலுவையில் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
மெடிகெயார் என்ற மருத்துவ கிளினிக்கின் உரிமையாளரும் தலைவருமான இவர் தனது மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு மனநல சேவைகளை வழங்குவதற்காக மாநில மருத்துவ காப்பீட்டிலிருந்து சுமார் 840000 அமெரிக்க டொலர்களை பெற்று மோசடி செய்தார் என குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
(Visited 11 times, 1 visits today)