இலங்கை – இந்திய கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்

நாகபட்டினத்திலிருந்து யாழ். காங்கேசன்துறை வரையான கப்பல் சேவை அடுத்த வாரம் முதல் மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை பல முறை இடைநிறுத்தப்பட்ட நிலையில், அடுத்த வாரம் முதல் மீண்டும் கப்பல் சேவை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்தமானில் இருந்து நாகை வந்த ‘சிவகங்கை கப்பல்’ நாளை இலங்கைக்கு சோதனை பயணமாக வருகை தரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 12 times, 1 visits today)