அறிவியல் & தொழில்நுட்பம் செய்தி

WhatsAppஇன் புதிய வசதி – பயனாளர்கள் மகிழ்ச்சி

வாட்ஸ்அப், டெலிகிராம் முதலிய தகவல் பரிமாற்ற செயலிகளானது, தொடர்ந்து தங்களது புதிய அப்டேட்களை அறிமுகப்படுத்தி, வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

அந்த வரிசையில் பல புதுவிதமான அப்டேட்களில் கலக்கிவரும் வாட்ஸ்அப், தங்களுடைய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் பிடித்தமானவர்களின் ஸ்டேட்டஸை ரீஷேர் செய்துகொள்ளும் அம்சத்தையும், பிடித்தவர்களை மென்ஷன் செய்து ஸ்டேட்டஸ் வைக்கும் அம்சத்தையும் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.

வாட்ஸ் அப் பயனாளர்களின் சின்ன சின்ன விருப்பங்களுக்கு கூட முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் செயல்பட்டு வரும் மெட்டா, ஸ்டிக்கர்களை க்ரியேட் மற்றும் எடிட் செய்யக்கூடிய அப்டேட், வாய்ஸ்நோட் அப்டேட், தனித்தனி டேப்கள் முதலிய பல்வேறு புதிய அம்சங்களை அப்டேட் செய்துவருகிறது.

அந்தவகையில் இன்ஸ்டாகிராமை போன்றே விருப்பமானவர்களை மென்சன் செய்து ஸ்டோரி வைக்கும் அம்சத்தையும், அதேபோல் யாராவது நம்மை மென்சன் செய்து ஸ்டேட்டஸ் வைத்தால் அதை ரீஷேர் செய்யும் அம்சத்தையும் அறிமுகப்படுத்தும் வேலையில் இருப்பதாக தெரிவித்துள்ளது

அம்சத்தின் சிறப்பு என்ன?

என்னதான் வாட்ஸ்அப் பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியிருந்தாலும், ஒவ்வொரு முறை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்கள் வைக்கும்போதும் “அதை யாருக்கு வச்ச? எதுக்கு வச்ச? அதை எனக்கு அனுப்பு.. அதை எனக்குதான் வச்சியா” முதலிய கேள்விகளும் குழப்பங்களும் ரிலேசன்ஷிப்பில் இருக்கும் ஜோடிகளுக்கு வருவது வழக்கம்.

அதேபோல தனக்கு பிடித்தமானவருக்கு சர்ப்ரைஸ்ஸாக ஸ்டேட்டஸ் வைக்க வேண்டும் என்ற விருப்பமும் பல்வேறு நபர்களுக்கு இருக்கும். ஒருவேளை அவர்களுக்காக ஒரு ஸ்டேட்டஸ் வைக்கும் போது, அந்த குறிப்பிட்ட நபர் அதைப்பார்க்காமல் போகக்கூட வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.

அதனால் வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தவிருக்கும் மென்சன் செய்து ஸ்டேட்டஸ் வைக்கும் அம்சமும், ஸ்டேட்டஸை ரீஷேர் செய்யமுடியும் அம்சமும் நிச்சயம் பல்வேறு நபர்கள் விரும்பும் அப்டேட்டாகவே இருக்கப்போகிறது.

WABetaInfo-ன் அறிக்கையின் படி, “ஸ்டேட்டஸ் அப்டேட் செய்யும்போது புதிய பட்டன் ஒன்று வாடிக்கையாளர்களுக்கு காண்பிக்கப்படும். அதைப்பயன்படுத்தி யாருக்கு ஸ்டேட்டஸை மென்சன் செய்யலாம் என்ற டேப் மூலம், விருப்பமான நபருக்கு மென்சன் செய்து ஸ்டேட்டஸ் வைத்துக்கொள்ளலாம். அதை மென்சன் செய்தநபர் தங்களுடைய ஸ்டேட்டஸ்ஸில் ரீஷேர் செய்துகொள்ளலாம்” என்று உள்ளது. ஆக, புதிய அப்டேட்டில் கவனம் செலுத்திவருவதாக மெட்டா தெரிவித்துள்ளது… காத்திருப்போம்!

(Visited 11 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி